டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தொடங்குகிறது.
7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்து வந்த தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனிடையே 12 அணிகள் பங்கேற்க உள்ள சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது.
இன்று தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் 2 போட்டிகள் நடைபெறுகின்றன .இதில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அபுதாபியில் நடைபெற உள்ளது .இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.