Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு இல்லை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க முடிவு இல்லை என அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |