தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் தற்போது வரை மூன்றாவது அலை காண அறிகுறி எதுவும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் மூன்றாவது வராது என்று கூற முடியாது எனவும், வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.