மத்திய பிரதேச மாநிலத்தில் லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் சசிகாந்த் மிஸ்ரா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கச்சர்காவன் என்ற நபர் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை பரிசீலித்த மேலாளர் மிஸ்ரா 10,000 லஞ்சம் தரும்படி கூறியுள்ளார். இதைப் பற்றி கச்சர்காவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்து சிபிஐ அமைப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதன் பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,