தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்டு தனது சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன், சாம்சங் மற்றும் சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டு இருந்தால் அதற்கு இதுவே நல்ல வாய்ப்பு.
பிளிப்கார்ட் realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. இதை வெறும் ரூ.1,499- க்கு வாங்கலாம். Realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 13,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உங்கள் பழைய டிவியை பரிமாறிக் கொள்வதன் மூலம் 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் 1,499 ரூபாய்க்கு டிவியை வாங்க முடியும். எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.