பன்றியின் சீறுநீரகம் மூளைச்சாவினால் பாதிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட கால்சேப் என்று கூறப்படும் பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் சேர்ந்த என்.யு.யு. லாங்கோன் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருந்தது. மேலும் அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் தருவாயில் இருந்தது.
இதனால் மூத்த மருத்துவரான ராபர்ட் மாண்ட்கோமரி அவர்களின் தலைமையில் மருத்துவ நிபுணர் குழு ஒன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருடன் கலந்து பேசி அனுமதியை பெற்ற பிறகு பன்றியின் சீறுநீரகத்தை அவருக்கு பொருத்தியுள்ளனர். மேலும் பன்றியின் சிறுநீரகமானது பாதிக்கப்பட்டவரின் உடலுக்கு வெளியே அவரின் காலில் உள்ள ரத்தக்குழாய்களின் இணைக்கப்பட்டு 54 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிராகரிக்காமல் சீராகத் தொடர்ந்து இயங்கியது. அதிலும் பன்றியின் சீறுநீரகம் சிறப்பாக செயல்பட்டு மனித உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றியது. குறிப்பாக மனிதர்களின் திசுக்கள் மற்றும் உறுப்புகளை பன்றியில் வைத்து வளர்த்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்துவது தொடர்பான பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை நடைமுறைக்கு வந்தால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.