Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… பேருந்து டிரைவர் போக்சோவில் கைது…!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பகுதியில் மணிவண்ணன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிடம் ஆசை வார்த்தைகள் கூறி மணிவண்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையறிந்த மனைவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மணிவண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |