அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தகோமா நகரில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி சூடு நடந்தபோது வீட்டின் முன் அடையாளம் தெரியாத ஒருவர் இருந்தது தெரியவந்துள்ளது.
தற்போது குற்றவாளியை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி குற்றவாளி இதுவரை கைது செய்யப்படாததால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேணடாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.