Categories
உலக செய்திகள்

‘நான் மிகவும் பிரமிப்பு அடைந்தேன்’…. சாதனை படைத்த இந்தியா…. பாராட்டு தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர்….!!

இந்தியாவின் சாதனையை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் குறைந்த, நடுத்தர வர்க்கம் கொண்ட நாடுகளுக்கும் தடுப்பூசியானது பாதுகாப்பான, மலிவு விலையில் கிடைப்பதற்காக இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில்கேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாகும்.

இருப்பினும் முற்றிலும் வேறுபட்ட சுகாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனை கண்டு நான் மிகவும் பிரமிப்பு அடைந்தேன். தற்போது இந்தியா 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இது இந்தியா வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். மேலும் இந்தியாவின் அனுபவத்திலிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தடுப்பூசி திட்டம் வெற்றி பெறுவதற்கு மக்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |