Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்-முன்னீர்பள்ளம் சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதில் 28 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் லோடு ஆட்டோ டிரைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் திருமலைகொழுந்துபுரம் பகுதியில் வசிக்கும் பட்டாணி என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பட்டாணியை கைது செய்ததோடு ரேஷன் அரிசியை லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |