ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 2 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பம் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் என மொத்தம் 2207 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏற்கனவே அவகாசம் நீட்டிக்கப்பட்டது இந்த நிலையில் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்ட காரணத்தால், கூடுதலாக நவம்பர் 9ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும் 2,207 பணி…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!
