குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ரவாலின் மனைவி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் 11.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்திற்கும், மருத்துவமனைக்கும் இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இதனால் இதுவரையில் இழப்பீட்டுத் தொகை வழங்க படாமலேயே இருந்து வந்தது. இதனை தொடர்ந்து அவரின் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதற்கு பதில் அளித்த நீதிமன்றம் மருத்துவர்கள் இலட்சியத்திற்கு காப்பீட்டு நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என கூறியது. மேலும் 11.5 லட்சம் அபராதத்தை 7.5% வட்டியோடு உடனடியாக வழங்குமாறு மருத்துவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.