Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL-லில் என்ட்ரி கொடுக்கும் ‘மான்செஸ்டர் யுனைடெட்’ …. புதிய அணியை வாங்க விருப்பம்….!!!

ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ம் தேதி பிசிசிஐ  வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம்பெற்று விளையாடியதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அதோடு வர்த்தக ரீதியாகவும் இப்போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளாக விளையாட உள்ளது. ஐபிஎல்-லில் இந்த புதிய இரு அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை பிசிசிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிட்டது .இந்நிலையில் பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஐபிஎல்-லில் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனால் மான்ஸ்டர் யுனைடெட் கிளப்  ஐபிஎல்-லில்  அணியை வாங்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரின் புகழ் மேலும் விரிவடையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் அணிக்கான டெண்டர் தேதியை பிசிசிஐ  நீடித்திருந்தது. இதனிடையே புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பம் அக்டோபர் 5-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏல விண்ணப்பத்திற்கான காலக்கெடு இருபதாம் தேதி வரை நீடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது .மேலும் ஐபிஎல் இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகின்ற 25-ஆம் தேதி பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் உலகிலேயே மிகப்பெரிய மைதானத்தை கொண்டுள்ள அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு அணி உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |