Categories
தேசிய செய்திகள்

நாங்க நகை வாங்க வந்து இருக்கோம்…. கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் திருடிய பலே கொள்ளையர்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் நகைக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள பாவா மார்க்கெட்டில் சத்குரு ஜுவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கடைக்கு மூன்று நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அவர்களில் இருவர் மட்டும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நகைகள் வாங்குவது போல் கடைக்குள் வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே வந்து அந்த மூன்றாவது நபருடன் பைக்கில் ஏறி தப்பித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நகை கடைக்கு வந்து கண்காணிப்பு கேமராவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |