பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள எந்திரங்களை வழங்க முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் திட்ட அமுலாக்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் இந்த அறிவுரையை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். மேலும் சுற்றுசூழல் குறித்து தொடர்ந்து கவனிக்குமாறு அமைச்சர் செயலாளர் பிரதமர் முதன்மை செயலாளர் ஆகியோருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.