பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பஞ்பூர் மாவட்டம் உள்ளது. இந்த பஞ்பூர் மாவட்டமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்பூர் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் வெடித்து சிதறி முழுவதுமாக சேதம் அடைந்தது. குறிப்பாக இந்த தாக்குதல் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தபட்டுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 2 இராணுவ வீரர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுயதாவது, “இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வருகின்ற தலீபான்கள் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என கூறியுள்ளனர்.