Categories
உலக செய்திகள்

83 கோடி ரூபாய் பரிசு…. மிஸ்ஸான லாட்டரி டிக்கெட்…. பிரித்தானியா தம்பதியினரின் சோக முடிவு….!!!

லாட்டரியில் 83 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அந்தப் பணத்தை பெற முடியாத தம்பதியினர் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு பிரித்தானிய தலைப்புச் செய்திகளில் மார்டின் டோட்-கே என்ற தம்பதியினர் இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் வாரந்தோறும் லாட்டரி சீட்டு வாங்கி தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என நினைத்தது உண்டு. இந்நிலையில் கேமிலோட் என்ற லாட்டரி நிறுவனம் அப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது தொடர்ந்து லாரி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களின் வழக்கமான எண்களைப் பயன்படுத்தி பரிசுகளை பெறலாம் என அறிவித்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் டோட்-கே தம்பதியினரின் அனைத்து எண்களும் £3 மில்லியன் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 83,41,71,938.10) பரிசுக்குத் தகுதிபெற ஒத்துப் போனது.

ஆனால் தம்பதியினரால் பரிசை பெற முடியவில்லை. ஏனென்றால் அவர்களின் லாட்டரி டிக்கெட் தொலைந்து போய் விட்டது. எனவே அடுத்த 30 நாட்களுக்குள் டிக்கெட்டை கொடுத்தால்தான் பரிசைப் பெற முடியும் என்று அந்நிறுவனம் கூறிய நிலையில் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. இதனையடுத்து தங்கள் கணினியில் லாட்டரி டிக்கெட் தொடர்பாக சேமித்து வைத்த தகவல்களை தம்பதியினர் காட்டியும் அதை அந்நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன்பின் பிரித்தானியாவின் துரதிஷ்டவசமான ஜோடி என இருவரும் அழைக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து தம்பதியினர் லாட்டரி நிறுவனத்திடமிருந்து பரிசை பெறுவதற்கு நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு தொடர்ந்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்த நிலையில் டோட்-கே தம்பதியினர் தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து சென்றுள்ளனர். எனவே இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தாங்கள் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |