முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ”ட்ரூத் சோசியல்” என்ற தனி சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது அவருக்கும் சமூக ஊடகங்களான பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றிற்கும் பலவகைகளில் கருத்து மோதல்கள் எழுந்து வந்தன. டிரம்ப் இதில் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதால் சில நேரங்களில் அவரின் பேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகளை அந்தந்த நிறுவனங்கள் நீக்கின.
ஒரு கட்டத்தில் அவரின் சமூக வலைதளப் பக்கங்கள் கூட தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் சமூக ஊடகங்களுக்கு எதிராக நான் தனியாக சமூக வலைதளம் உருவாக்குவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னதை செய்யும் விதமாக தற்போது தனி சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார் .
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற தனி சமூக வலைதளத்தை உருவாக்கி உள்ளார். ட்ரூத் சோசியல் வலைதளத்தில் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் ட்விட்டரில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.