Categories
தேசிய செய்திகள்

அடக்கருமமே… இந்த சமையல்காரர் சப்பாத்தி சுடுவத பாருங்களே… வைரலாகும் வீடியோ…!!!

சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல் செய்த சமையல்காரரின் வீடியோ வைரலான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல்காரர் ஒருவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரோட்டோர ஓட்டல் ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஒருவர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி சுடுவதற்கு முன்பாக அதில் எச்சிலை துப்பியுள்ளார். அங்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அந்த சமையல்காரர் செய்த செயலைப் பார்த்து விட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக கவுகாத்தி என்ற பகுதியில் பானிபூரி கடை நடத்தும் நபர் ஒருவர் சிறுநீரை கழித்து அதை ரசம் உள்ள பாத்திரத்தில் ஊற்றும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |