Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அனைவருக்கும் சம்பள உயர்வு…. சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பள உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சர்வதேச ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் “salary budget planning report”என்ற அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் 2022ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 9.3% சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த 30% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |