போக்குவரத்து விதிகளை மீறிய 2844 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் காங்கேயம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தலைக்கவசம் அணியாமலும், மது குடித்துவிட்டும், மோட்டார் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், அதிவேகமாக வாகனம் ஒட்டியதும் உள்பட பல்வேறு விதிகளை மீறியதாக 2844 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். இந்த தகவலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.