Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup பயிற்சி ஆட்டம் : அதிரடி காட்டிய ரோகித் சர்மா ….! ஆஸியை துவம்சம் செய்தது இந்தியா ….!!!

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.இதில் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்கள் குவித்தார் .இந்திய அணி சார்பில் அஸ்வின் 2 விக்கெட்டும் ,புவனேஸ்வர் குமார் ,ஜடேஜா மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதன்பிறகு 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.இதில்  தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர் .இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர் .இதில் கே.எல்.ராகுல் போட்டி 39 ரன்னில் ஆட்டமிழக்க,ரோகித் சர்மா 60 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு சூர்யகுமார் யாதவ் உடன் ,ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இறுதியாக 17.5 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது

Categories

Tech |