கனடாவின் ரொறன்ரோ மாகாணத்திலிருந்து, சாண்டோ டோமிங்கோவிற்கு புதிதாக விமானங்கள் இயங்கும் என்று ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கனடாவிலிருந்து இந்த விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து, தொடங்கவிருக்கிறது. அதன்படி, ரொறன்ரோ மாகாணத்திலிருந்து Dominican Republic தலைநகரான சாண்டோ டோமிங்கோவிற்கு வாரம் இரண்டு தடவை விமானம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிழமைகளில், விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் கனடா கூறியிருக்கிறது. இந்த விமானங்களில் ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு அம்சங்களும், அதிவேக வைஃபை வசதிகளும் இருக்கிறது.
இது குறித்து, ஏர் கனடாவின் துணைத் தலைவராக இருக்கும் மார்க் கலர்டோ தெரிவித்துள்ளதாவது, ஏர் கனடா, பயணிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் தான் முன்னுரிமையாக கருதுகிறது. எங்களது விமானங்களுக்கு வரும் பயணிகளை வரவேற்பதற்கு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் .