தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தடுப்பூசி கிடங்கு ஊழியர், வட்டார சுகாதார புள்ளியியலாளர் , புள்ளியியல் உதவியாளர் பணிகளில் காலியாக உள்ள 191 பணியிடங்களுக்கு நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.