Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த டீம்ல ஒருத்தர் தான் அடிக்கிறாரு… ஆனா கப்பு இந்த டீமுக்கு தான்… அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதனைத்தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பிரதான (குரூப் 12) போட்டிகள் நடைபெற இருக்கிறது..  ஏற்கெனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய 4 அணிகள் ஒரு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டும் 2 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

இந்த சூழலில் இந்த 7ஆவது டி20 உலக கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் அனைத்து அணிகளும் பலமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. கடந்த சில மாதங்களாகவே இந்த உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்? என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில், அடிக்கடி கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை பேசி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்ற அதிக வாய்ப்பிருக்கிறது.. இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை என்றாலும் கூட வலுவாகவே இருக்கின்றது. மோர்கன் பேட்டிங் பார்மில் இல்லை என்றாலும், அவரது கேப்டன்சி மிக அருமையாக இருக்கிறது.. அதே வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் தான் இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்..

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு தான்.. ஏனென்றால் அந்த அணியில் மேக்ஸ்வெல் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.. இவரின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |