Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுடலை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |