Categories
தேசிய செய்திகள்

“இதைப்பற்றி பேசவே இல்லை” ஆனால் டி20 மட்டும் விளையாடுவீர்களா..? பிரதமரை விமர்சித்த ஒவைசி….!!!

பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சீனா ஊடுருவல் போன்றவை குறித்து பேசுவதே இல்லை என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் அதிகமாக என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இதுவரையிலும் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனா இந்திய எல்லையில் ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.ஏம் தலைவரான அசாதுதீன் ஒவைசி, இந்தியாவின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.

அசாதுதீன் ஒவைசி நாட்டின் பல்வேறு விஷயங்கள் பற்றி கூறியபோது “பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, லடாக் எல்லையில் சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் அமர்ந்திருப்பது தொடர்பாக ஒருபோதும் பேசுவதே இல்லை. நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நாள்தோறும் 20-20 விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் டி20 விளையாடுவீர்களா..? என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |