பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் ஒன்று பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் அருகே நடந்துள்ளது. அந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.