விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே படைபுளு தாக்குதலிலிருந்து மக்காச் சோளப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு படைபுளு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு தவிர்க்கும் பொருட்டு வேளாண்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.