பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி தமிழக கவர்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து கண்டு ரசித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது புதிதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டிக்கு கடந்த 15-ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அதன்பின் மலைகளுக்கு நடுவில் தண்ணீரை தேக்கி வைத்து பின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
இதையடுத்து அவலாஞ்சி வனப்பகுதியில் இருக்கும் நர்சரியில் ஆர்கிட் செடிகளை பார்வையிட்டு அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலையில் சென்றபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துள்ளார். அதற்குப் பிறகு ராஜ்பவனுக்கு வந்த நிலையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதில் கோத்தா மற்றும் தோடர் ஆகிய பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து இசைக்கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.
இதனை கவர்னர் மற்றும் அவரின் குடும்பத்தினர் இருக்கையில் அமர்ந்தபடி கண்டு ரசித்துள்ளனர். பின் கவர்னர் பழங்குடியின மக்கள் உடன் குழு புகைப்படம் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் ஊட்டியில் சுற்றுப்பயணத்தை கவர்னர் முடித்துக்கொண்டு தற்போது விமானம் மூலமாக குடும்பத்தினருடன் சென்னை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். மேலும் அந்நேரம் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.