Categories
உலக செய்திகள்

“ஹைபர்சோனிக் ஏவுகணை ” அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு…. சோதனை நடத்திய சீனா….!!

ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் மாதம் சோதித்துப் பார்த்ததாக தகவல் வெளிவந்துள்ளது

அமெரிக்க உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சீன நாடானது புதிய ஹைபர்சோனிக் அணு ஆயுத ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் மாதம் சோதித்துப் பார்த்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் லாங் மார்ச் ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை உயரம் குறைவான சுற்றுப்பாதையில் வலம் வந்து தன் இலக்கை நோக்கிச் சென்றதாகக் Financial Express செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒலியின் வேகத்தை போல 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளே ஹைபர்சோனிக் என அழைக்கப்படுகிறது.

இந்த ஹைபர்சோனிக் தொழில் நுட்பத்தினை,

1.சீனா

2.ரஷ்யா

3.அமெரிக்கா மற்றும் ஐந்து நாடுகள் வைத்துள்ளது.

இதில் பாலிஸ்டிக்கை தடுக்கின்ற தொழில்நுட்பத்தினை அமெரிக்கா வைத்து இருந்தாலும் கூட ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்டறிந்து தடுக்கும் திறமை அதற்கு இருப்பதுபோல் தெரியவில்லை. இந்நிலையில் தைவானுக்கு அருகில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுடனான அந்த உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா இந்த சோதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |