Categories
தேசிய செய்திகள்

‘ஒரு சமோசாவுக்காக இப்படியா சண்டை போட்டுபீங்க’… அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸார்… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாகளை வாங்கிக் கொண்டு பிரயாக்ராஜ் காங்கிரஸ் செயலாளர் இர்ஷத் உல்லா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ளவர்களுக்கு சமோசாகளை வினியோகம் செய்து கொண்டிருந்தபோது, மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஹசீப் அகமது அவரிடமிருந்து 3 சமோசாகளை எடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இர்ஷத் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட இரண்டு பேருக்கும் சண்டை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டி கொண்டனர். இவரின் சண்டைகளை பலரும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். நீங்கள் ஒன்றும் வீட்டில் இல்லை பொது இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் இப்படி சண்டை போடக்கூடாது என்று கூறியும் அவர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |