விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது பிக் பாஸ். 4 சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் கஸ்தூரி இந்நிகழ்ச்சியை கேலி செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஐந்தாவது சீசனில் ஒரு எபிசோடை கூட பார்க்காதவர்கள் என்னை போன்று யாராவது இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கிடையாது என்றும் இது ஸ்கிரிப்ட் படி நடப்பதாகவும் 100 நாள் வேலை திட்டம் என்றும் கேலி செய்துள்ளார். அதோடு ஸ்டார் விஜய் டிவி கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்ற ஹாஸ்டெகை பகிர்ந்து பிக்பாஸில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் விஜய் டிவியின் ஆட்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் கஸ்தூரியுடன் நீங்களும் முன்னாள் போட்டியாளர் தானே என்று கேட்டதற்கு தான் சம்பளம் வாங்கி விட்டதாகவும் சீசன் 3 நிகழ்ச்சி நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.