தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம். அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இது.
இதேபோன்று கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான இந்தப் படம் அன்று முதல் இன்று வரை வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை டாக்டர் திரைப்படம் ஓவர்டேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமெரிக்காவில் மாஸ்டர் திரைப்படம் 439k டாலர் வசூலை முறியடித்து டாக்டர் படம் 440k டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.