Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup… அதிக ஸ்கோர்… “4ஆவது இடத்தில் கோலி”… யார் முதலிடம் தெரியுமா?… இதோ!!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 7ஆவது டி20 உலக கோப்பை முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 6 டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்..

இதில் முதலிடத்தில் இலங்கை அணியை சேர்ந்த மகிளா ஜெயவர்தனே இருக்கிறார்.. இவர் மொத்தமாக 31 இன்னிங்ஸில் 1,016 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 111 பவுண்டரி, 25 சிக்ஸர் அடித்துள்ளார்.. 1 சதம், 6 அரைசதம் அடித்துள்ள இவரது ஒரு இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் 100 ஆகும்..

இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் இருக்கிறார். இவர் மொத்தமாக 26 இன்னிங்ஸில் 920 ரன்கள் குவித்துள்ளார்.. இவர் 75 பவுண்டரி, 60 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2 சதம், 7 அரைசதம் அடித்துள்ள இவரது ஒரு இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் 117 ஆகும்..

மூன்றாவது இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த திலகரத்னே தில்ஷன் இருக்கிறார். இவர் 34 இன்னிங்சில் 897 ரன்கள் குவித்து இருக்கிறார். இவர் 101 பவுண்டரி, 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.. 6 அரை சதம் அடித்துள்ள இவரது அதிகபட்ச ஸ்கோர் 96 ஆகும்.

நான்காம் இடத்தில் இந்திய அணியை சேர்ந்த விராட் கோலி இருக்கிறார்.. இவர் 16 இன்னிங்சில் 777 ரன்கள் குவித்துள்ளார்.. இவர் 73 பவுண்டரி, 19 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 9 அரை சதம் அடித்துள்ள இவரது அதிகபட்ச ஸ்கோர் 89 ஆகும்..

ஐந்தாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் இருக்கிறார்.. இவர் 29 இன்னிங்சில் 717 ரன்கள் குவித்துள்ளார். இவர் 51 பவுண்டரி, 30 சிக்சர் அடித்துள்ளார்.. 5 அரை சதம் அடித்துள்ளார் இவரது அதிகபட்ச ஸ்கோர் 79 ஆகும்..

இதில் இரண்டு இடத்தில் உள்ள மகிளா ஜெயவர்தனே, 4ஆவது இடத்தில் உள்ள தில்ஷன் இந்த உலக கோப்பையில் விளையாட மாட்டார்கள். எனவே இரண்டாவது இடத்தில் உள்ள கிறிஸ் கேல் அனேகமாக இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் அடித்து முதல் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது.. அதேசமயம் விராட் கோலி 4ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், கோலியும் முதலிடத்தை பிடிக்க போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

அதிக ரன்கள் அடித்தவர்களின் விவரம் :

Categories

Tech |