Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை காப்பாற்ற சென்ற பாலாஜி…. விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மற்றும் மகன் ஆகிய 2 பேரும் கடலின் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கவிபாரதி பகுதியில் பாலகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், ரக்சன் மற்றும் ரிஷிவந்திகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதினால் குடும்பத்தினருடன் பாலாஜி தான் வசிக்கும் கத்தார் நாட்டில் இருக்கும் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடலில் சிக்கித் தவித்த பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்ததில் பாலாஜி அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் மகன் ரக்சன் தந்தையை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கியுள்ளார். அதன்பின் தந்தையும், மகனும் கடலின் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை கரையோரத்தில் இருந்து பார்த்த பாலாஜியின் மனைவி மற்றும் மகள் கதறி அழுதுள்ளனர்.

இதனை அடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு கொண்டுவர இரு நாட்டின் தூதரகங்கள் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பேரில் உடல்கள் விமானம் மூலமாக திருச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கும்பகோணத்தில் இருக்கும் கவிபாரதி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் முடித்து விட்டு தகனம் செய்துள்ளனர்.

Categories

Tech |