சமீபகாலமாக திரையுலக நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரிஸில் கால் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம்.
பல கதைகளை கேட்ட அவர் ஒரு வெப் சீரிஸ் கதைக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வெப் சீரிஸ் தெலுங்கில் தயாராக இருப்பதாகவும் சூர்யா வங்கலா இயக்க இருப்பதாகவும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இது வெளியாகும் என்பதும் தெரியவந்துள்ளது. திரிஷா ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து முடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.