Categories
தேசிய செய்திகள்

“உங்க புர்காவை கழட்டுங்க”… சோதனை என்ற பெயரில் கும்பல் செய்த அராஜகம்… வைரலாகும் வீடியோ…!!!

இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணின் புர்காவை கழட்ட சொல்லி  சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது பெண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் பின்சீட்டில் அமர்ந்திருந்த இஸ்லாம் பெண்ணின் புர்காவை கழட்டுமாறு வற்புறுத்தி சோதனை செய்தனர். மேலும் புர்காவை கழட்டி உன் முகத்தை காட்டு எனவும் அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயத்தில் இளம்பெண் நடு ரோட்டிலேயே தான் அணிந்திருந்த புர்காவை கழட்டினார். மேலும் அவர்கள், அந்த இளைஞர் இந்து மதத்தை சேர்ந்தவர் எனவும், அந்தப் பெண் இஸ்லாமியர் என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்ததும், இனி இது போல் வெளியில் வரக்கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் இது சம்பந்தமாக புகார்கள் எதுவும் வராத காரணத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடுரோட்டில் இளம்பெண்ணின் புர்காவை கழட்டுமாறு கூறியது, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |