Categories
தேசிய செய்திகள்

பெற்ற தந்தையே மகளை கற்பழித்து… நண்பர்களுக்கு விருந்தாக்கிய வழக்கு…. சிக்கிய கட்சி மாவட்ட தலைவர்கள்… !!!

தந்தை தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சில அரசியல் பிரமுகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி இருந்தது. லாரி டிரைவரான இந்த சிறுமியின் தந்தை இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று புது ஆடைகள், சாப்பாடு, தின்பண்டங்கள் என அனைத்தும் வாங்கி கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதை வெளியே சொன்னால் அந்த சிறுமியின் தாயாரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறுமியை அடிக்கடி வெளியே அழைத்து சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்து உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் இருக்கும் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவருடைய நண்பர்களான சில அரசியல் பிரமுகர்களுக்கும் இந்த சிறுமியை விருந்தாக்கி உள்ளார்.

தற்போது அந்த மாணவி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். பல வருடங்களாக கொடுமைகளை அனுபவித்து வந்த அந்த மாணவி தனது தாயிடம் நடந்த அத்தனையும் கூறியுள்ளார். பின்னர் தனது தாயுடன் சதார் கோட்வாலி காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ் மற்றும் அவருடைய மூன்று தம்பிகள். நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோசி , பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் மற்றொரு தலைவர் நீராஜ் திவாரி உட்பட 28 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்துள்ளார். சிறுமி குறிப்பிட்ட மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்ற ஹோட்டலுக்குச் சென்று சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

Categories

Tech |