தமிழக அரசால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் உள்ள கோயம்பேடு உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னையில்கட்டப்பட்ட மேம்பால பணிகள் அனைத்தும் 93.50 கோடி மதிப்பீட்டில் 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் அனைத்துமே 2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் 2018 வரை எதுவுமே நடக்கவில்லை. இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுவை அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை தளபதி அரசு பெற்று, அங்கு கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம். இந்த பணிகள் எதையுமே செய்யாமல் கடந்த மூன்று வருடங்களாக அதிமுக அரசு காலத்தை வீணாகக் கழித்துள்ளது. தமிழக அரசு இறுதிகட்ட பணிகளை முடித்த பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.