அக்டோபர் 21ம் தேதி முதல் 8 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன. மேலும் பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் தொற்று குறைந்து வந்த காரணத்தினால் முதலில் 9, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 8 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஒரிசா மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 21 தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. மேலும் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவையும் தற்போது எடுக்கவில்லை என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.