மது அருந்துவதற்காக மளிகை கடையில் இருந்து பொருட்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருமாச்சிபாளையம் பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக் கடை வைத்து அதை சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தயாளன் கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் ஜூஸ் பாட்டில்களின் எண்ணிக்கை குறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்துள்ளார். அதில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் மணி, விஜயகுமார், வீரமணி, தினேஷ் ஆகிய 4 பேரும் பொருட்களைத் திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இது பற்றி தயாளன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.