நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கயிறை கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதையடுத்து தங்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.