Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா நினைவிடத்தில்…. “அக்கா, அக்கா” என கதறி அழுத சசிகலா….!!!!

தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது தொண்டர்கள் அனைவரும் கூட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர். சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு இன்றுதான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதன் முதலில் வருகை தந்துள்ளார்.

Categories

Tech |