Categories
சினிமா தமிழ் சினிமா

ஊபர் கார் ஓட்டுநர் மீது நடிகை ரித்விகா புகார்..!!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஊபர் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளார்.

‘பரதேசி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்பு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மேரி கதாபாத்திரத்தில் நடித்த ரித்விகா தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

 Image

அதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றார். தற்போது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்து வருகிறார்.

Image

இந்நிலையில் ரித்விகா ஊபர் காரில் சமீபத்தில் பயணம் செய்துள்ளார். அது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஊபர் காரில் பயணித்தேன். அந்த ஓட்டுநர் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். காரும் கட்டுப்பாடோடு இல்லை, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதற்கு ஊபர் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |