14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில்,நடந்த பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .இதில் நேற்று துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் – டூ பிளெசிஸ் ஜோடி களமிறங்கினர் .
இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இதில் ருதுராஜ் 32 ரன்னில் ஆட்டமிழக்க,அடுத்து வந்த ராபின் உத்தப்பா 31 ரன்னில் வெளியேறினார் . இதன்பிறகுன் களமிறங்கிய மொயின் அலி , டு ப்ளஸிசியுடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் அதிரடி ஆட்டத்தையை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் டூ பிளெசிஸ் 86 ரன்னும் , மொயின் அலி 37 ரன்னும் சேர்த்தனர். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவிந்தது .இதில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இது தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்னில் ஆட்டமிழக்க , சுப்மன் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார் .அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்னில் சுருண்டது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும்,ஹேசில்வுட் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.