Categories
அரசியல்

கோவாவில் பாஜக முழுமையான பெரும்பான்மை பெறும்…. அமித்ஷா நம்பிக்கை…!!!

தெற்கு கோவாவிலுள்ள தர்மேந்திரா கிராமத்தில் தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றது. அதுமட்டுமின்றி இந்தியாவினுடைய எல்லைகளை யாரும் சீர்குலைக்க வேண்டாம் என்ற ஒரு செய்தியையும் அனுப்பி இருந்தோம். எல்லையில் அத்துமீறல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தது ஒரு காலம் இருந்தது.

ஆனால் இப்போது நாம் பதிலளிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முழுமையான பெரும்பான்மை பெறும். தேர்தலுக்கு இன்னும் அதிகமாக நேரம் இருக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் தலைமையில் மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க கோவா மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இரட்டை எந்திரம் மாநிலத்தின் வளர்ச்சியை தொடர உதவும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |