தமிழகத்தில் பணி இடமாற்றம் செய்த காவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய காவலரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவலரை விடுவிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடமாற்றம் செய்த காவலரை விடுவிக்க இயலாத சூழ்நிலை இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்தக் காரணத்தை ஒரு வாரத்திற்குள் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.