அதிமுகவின் பொன் விழா வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் 50-வது ஆண்டு பொன் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை ஆரம்பித்து அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார்.
இதனையடுத்து எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சியை வழிநடத்தி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநாட்டினார். அதிமுகவை எந்த ஒரு கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது ஆலமரமாக இருந்தது. 20 ஆண்டுகாலம் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக வழங்கியுள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட அதிமுக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வரும். இந்த இக்கட்டான காலகட்டம் கடந்து போகும் என்று பேசியுள்ளார்.