Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடைக்கு சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள பிலியம்பாளையம் பகுதியில் விவசாயியான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நம்பியூரில் இருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் தனது இருசக்கர வாகனத்தில் வீடு செல்வதற்காக சாலையை கடக்கும் போது, பின்னால் வந்த பனியன் கம்பெனிக்கு ஆள் ஏற்றிச்செல்லும் வேன் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் கருப்புசாமியின் தலை மற்றும் உடல் பகுதியில் பலமாக காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கருப்புசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரான ஜலிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |